அதிபர் ஜோவினல் மோய்ஸ் கொலை வழக்கில் 28 பேர் கைது

ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினல் மோய்ஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரீபியன் தீவான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினல் மோய்ஸ், கடந்த புதன்கிழமை அன்று அடையாளம் தெரியாத…

ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினல் மோய்ஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரீபியன் தீவான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினல் மோய்ஸ்,
கடந்த புதன்கிழமை அன்று அடையாளம் தெரியாத நபர்களால் தனது வீட்டில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கி சூட்டில் உடனிருந்த அவர் மனைவி படுக்காயம் அடைந்தார்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, 28 நபர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில் 26 பேர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலும் இரண்டு பேர் அமெரிக்காவில் வசித்த வந்த ஹைதி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.