தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வருகை புரிந்துள்ளார். ஆளுநரின் வருகையை ஒட்டி மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தந்துள்ளார்.சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவர், அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா சாலை வழியாக காரில் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வருகை புரிந்தார்.
தொடர்ந்து 5 நாட்கள் நீலகிரியில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தின் அருகில் உள்ள கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்குச் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆளுநர் வருகையையொட்டி நீலகிரி மாவட்ட எல்லைகள் மற்றும் கோத்தகிரி சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி, சுமார் 500க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







