திருவள்ளூர் அருகே ஏரியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு!

பெரிய பாளையம் அருகே ஏரியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் அடுத்த மதுரவாசல் ஏரி ஓரம் ஆடு மேய்க்க சென்ற கிராம…

பெரிய பாளையம் அருகே ஏரியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் அடுத்த மதுரவாசல் ஏரி ஓரம் ஆடு
மேய்க்க சென்ற கிராம மக்கள் அப்பகுதியில் எரிந்த நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று இருப்பதை கண்டு காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய பாளையம் காவல் துறையினர்
விசாரணையில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன் எரிக்கப்பட்டு எலும்புக்கூடாக
இருந்தது தெரிய வந்தது. கையில் வளையல் அணிந்திருந்ததால் பெண் ஒருவர் கொலை
செய்து எரிக்கப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிந்த நிலையில் இருந்த எலும்புக்கூடை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்களை சேகரித்து எலும்புக்கூடை அடையாளம் காண பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

—-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.