திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு!

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.  செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாட்டுநல்லூர் முதல்…

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
பெருமாட்டுநல்லூர் முதல் நிலை ஊராட்சி, பாண்டூர் கிராமத்தில் 3ஏக்கர் 50 சென்ட் பரப்பளவு கொண்ட நிலத்தினை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக நந்திவரம்
கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு நில உரிமை மாற்றம் செய்யக்கோரி வருவாய் ஆய்வாளர் அறிவித்தார். இதற்கு கிராமப் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊராட்சியில் 3000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 12000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக இப் பகுதி நிலத்தை கொடுத்தால் சிறியவர் முதல் பெரியவர் வரை மூச்சுத் திணறல், கொசுத்தொல்லை, சுகாதார சீர்கேடு போன்றவற்றால் பொதுமக்கள் அவதியுர நேரிடும். பாண்டூர் பகுதியில் மட்டும் சுமார் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஆடு மாடுகள் மேய்ச்சல் நிலமாகவும் இப்பகுதி பயன்பட்டுவருகிறது.

இந்தப் பகுதியில் இருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அஸ்தினாபுரம் ஏரியும், 20 மீட்டர் தொலைவில் குழந்தைகள் நல காப்பகமும், இடது புறமாக மிகப்பழமையான தேவாலயமும், வலது புறமாக மசூதியும் இருக்கின்றன. ஆகையால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு நில உரிமை மாற்றம் செய்யக்கூடாது எனக் கிராமப் பொதுமக்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஊராட்சிமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்
அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.