கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி கொள்ளை!

கோபிசெட்டிபாளையம் பாரதி வீதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடியை  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோபிசெட்டிப்பாளையம் வடக்கு பார்க் வீதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில்…

கோபிசெட்டிபாளையம் பாரதி வீதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடியை  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோபிசெட்டிப்பாளையம் வடக்கு பார்க் வீதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சுகந்தி என்பவரின் வீட்டை ரூ.2.25 கோடிக்கு வாங்குவதற்கு விலை பேசி ரூ15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகையைக் கொடுப்பதற்காகவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் ரூ2.80 கோடியை, புதியதாக வாங்க இருக்கும் வீட்டில் தனி அறையில் வைத்திருந்திருந்தார். 

இந்நிலையில் வழக்கம் போல் சுதர்சன், அவரது வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மதியம் வந்து பார்த்த போது முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதைத்தொடர்ந்து உள்ளே சென்ற போது, வீட்டின் படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே 4 பைகளில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்டு
இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து சுதர்சன் அளித்த தகவலின் பேரில் கோபிசெட்டிப்பாளையம் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். 

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.