காவலர்களின் சாகச நிகழ்வு: கண்டு ரசித்த முதலமைச்சர் விஜய்!

காவலர் விருது வழங்கும் விழாவில் காவலர்களின் சாகச நிகழ்வை முதலமைச்சர் விஜய் கண்டு ரசித்தார்.

சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு 2023, 2024, 2025 -ஆம் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட 665 காவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

இதனைத்தொடந்ர்து, முதலமைச்சர் விஜய் கடலோர காவல்நிலையங்களிலின் கண்காணிப்பு பணிக்காக வாகனங்களை வழங்கும் நிகழ்வை கொடியசைத்தொடங்கிவைத்தார். க்கடலோர காவல்படைக்கு வழங்கப்பட்ட 96 இருசக்கர வாகனங்களும், 42 நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்றன.

இதனைத்தொடர்ந்து காவல்துறையில் மோப்பநாய் சாகச நிகழ்வு நடைபெற்றது. அப்போது முதமுதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய் ராக்கி பூங்கொத்து வழங்கி சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியது. முதலமைச்சர் விஜய் பதில் சல்யூட் அடித்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மோப்பநாய்களின் சாகச நிகழ்வை கண்டு ரசித்தார்.

இதனையடுத்து தீவிர வாதிகளிடம் இருந்து பிணைக்கைதிகளை மீட்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி, காவலர்களின் இருசக்கர சாகச நிகழ்வு ஆகியவற்றை முதலமைச்சர் விஜய் கண்டு ரசித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.