நடந்த் முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது.
இதனிடையே ஆதிமுக சார்பில் ஓட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் திருச்சி கிழக்கு உட்பட கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.வெங்கடாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவைச் செயலர் மற்றும் முதல்வர் விஜய், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஜூலை 31-ஆம் தேதி ( இன்று) ஒத்திவைத்தனர்.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொது நீதிபதிகள், வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்




