ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்; வருத்தம் தெரிவித்த விக்ரம்!

தன்னுடைய ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்திற்கு நடிகர் விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார். கோப்ரா படத்தின் புரமோஷனை முன்னிட்டு திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிருனாளினி…

தன்னுடைய ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்திற்கு நடிகர் விக்ரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோப்ரா படத்தின் புரமோஷனை முன்னிட்டு திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிருனாளினி ரவி உள்ளிட்டோர் சென்றனர். நடிகர் விக்ரம்  விமானம் மூலமாகச் சென்றார். அவரை பார்க்க விமான நிலையத்தில் அதிகமான ரசிகர்கள் கூடினர். கூட்டம் அதிகமான நிலையில் ஏர்போர்ட்டில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் ரசிகர்கள் கூட்டத்தை விரட்டத் தடியடி நடத்தினர். மேலும் ஒரு காவலர் காலால் சிலர் எட்டி உதைக்கும் வீடியோவும் வைரல் ஆனது.

https://twitter.com/chiyaan/status/1562079645587374081

அண்மைச் செய்தி: ‘’சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு’ – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், நடிகர் விக்ரம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்குத் திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் இதயம் கனிந்த நன்றிகள். அதே வேளையில் சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/chiyaan/status/1562079758644838400

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.