NDTV நிறுவனத்தை கைப்பற்றுகிறதா அதானி குழுமம்?

NDTV நிறுவனத்தில் 29.18% பங்குகளை வைத்துள்ள RRPRH நிறுவனம், அதனை வேறொரு நிறுவனத்திற்கு விற்றதை அடுத்து, NDTV நிறுவனம் கைமாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. New Delhi Tvelevision(NDTV) நிறுவனம் சுமார் 30 வருடங்களாக…

NDTV நிறுவனத்தில் 29.18% பங்குகளை வைத்துள்ள RRPRH நிறுவனம், அதனை வேறொரு நிறுவனத்திற்கு விற்றதை அடுத்து, NDTV நிறுவனம் கைமாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

New Delhi Tvelevision(NDTV) நிறுவனம் சுமார் 30 வருடங்களாக செய்தி ஊடகத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனமான RRPRH நிறுவனத்திடம் NDTV நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) நிறுவனத்திற்கு கைமாறுவதாக நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், RRPRH நிறுவனம் தனது பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பதாக இருந்தால், அது குறித்து NDTV நிறுவனத்தின் நிறுவனர்களான ராதிகா ராய் மற்றும் பிணராய் ராய் ஆகியோரிடம் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக NDTV நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இந்திய பங்குச் சந்தைகளுக்கு NDTV நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் கிளை நிறுவனம் VCPL என கூறப்படுகிறது. NDTV நிறுவனத்தில் VCPL பெற்றுள்ள 29.18 சதவீத பங்குகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், NDTV நிறுவனத்தின் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க அதானி குழுமம் வெளிப்படையான பேரத்தை நேற்று அறிவித்தது. இதன் மூலம், NDTV நிறுவனத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதானி குழுமம் முயல்வது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

எனினும், அதானி குழுமத்தின் முயற்சிகளுக்கு எதிராக நிற்கும் ராதிகா மற்றும் பிணராய், NDTV நிறுவனம் பத்திரிகைத் துறையில் தனது வழக்கமான முத்திரையுடன் செயல்படும் என உறுதி அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.