26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை…

 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி!’

இதற்கு முன்னதாக சென்னையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகின்ற 25-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.