பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்த காவல்துறை…!

உத்தரபிரதேசத்தில் பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய 4 சிறுவர்களின் தாய்மார்களை காவல்துறை கைது செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் பதாயுன் மாவட்டத்தில், 8 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரை நான்கு சிறுவர்கள் ஆபாசமாக கேலி செய்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நல்லொழுக்கத்தை கற்பிக்கவில்லை எனக்கூறி சம்பந்தபட்ட 4 சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்துள்ளனர். இது உத்தரபிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கைது குறித்து பேசியுள்ள காவல் ஆய்வாளர் அஜய்பால் சிங் , இந்த நான்கு சிறுவர்களும் மோசமான செயல்களில் ஈடுபட்டவர்கள். இவர்களுக்கு நல்ல மதிப்புகளை கற்பிக்காததற்கும், இதுபோன்ற குற்றங்களுக்கு வழிவகுத்த பெற்றோருக்கு ஒரு செய்தியை அனுப்பவதற்காகவும் , பாடம் கற்பிப்பதற்காகவும் சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.  தொடர்ந்து அவர் ”வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் சிறுவர்களின் தந்தைகள் ஊர் திரும்பியதும் கைது செய்யப்படுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.