திருப்பூர் அருகே சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவரபாளையம் பிரிவில் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்துவந்த நபரை தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நடத்தப்பட்ட விசாரனையில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.








