கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு துபாயில் வெளியிடப்பட்டது.
கவிஞர் வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’. இந்நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது. இந்தி – உருது -மலையாளம் – கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெற்ற ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெற்ற இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் அதனை பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “துபாயில் இருக்கிறேன். உலகப் புகழ்மிக்க அட்லாண்டிஸ் ஓட்டல் RISE சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு. கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘The Saga of the Cactus Land’ வெளியிடப்பட்டது; 32 நாட்டார் பெற்றுக்கொண்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.