நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி: லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு

வங்கி முறைகேடு வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்த தடையில்லை என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி முறைகேடு செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக நீரவ்மோடி…

வங்கி முறைகேடு வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்த தடையில்லை என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி முறைகேடு செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக நீரவ்மோடி அறிவிக்கப்பட்டார். அவர் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று லண்டன் போலீசார் அவரை கைது செய்தனர். 2019ம் ஆண்டு முதல் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியை இந்தியா கொண்டு வந்து விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டும் என்பதால், அவரை நாடு கடத்த அனுமதிக்க கோரி லண்டன் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்து கோரிக்கை விடுத்தது.‘

இந்த வழக்கு விசாரணையின் போடு, இந்தியா சென்றால் தான் கொலை செய்யப்படவோ, அல்லது உயிரிழப்பயோ செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்பதால் நாடு கடத்த அனுமதிக்க கூடாது என நீரவ் மோடி முறையிட்டிருந்தார். அவரின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று வழங்கப்பட்டது.

அதில், நீரவ் மோடியை நாடு கடத்த தடையில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் நீரவ் மோடியை அதிக கவனத்துடன் கண்காணித்து கொள்வதாக இந்திய அரசு, லண்டன் நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இந்த உறுதி மொழியைக் காப்பாற்ற தவறிவிட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கை பாதிக்கப்படும் என்பதால் இந்தியா நிச்சயம் வாக்குறுதியை செயல்ப்படுத்தும் என்றும் லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, பொதுமுக்கியத்தும் வாய்ந்த வழக்காக உச்சநீதிமன்றத்தில் நீரவ் மோடி 14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும். இதற்கும் லண்டன் உயர்நீதிமன்றம் தான் அங்கீகரிக்க வேண்டும் என்பதால் நீரவ் மோடி நெருக்கடியில் நீரவ் மோடி உள்ளார். பிரிட்டன் நீதிமன்றங்களின் சட்ட முறையீட்டை அவர் இழந்துவிட்டாலும், ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடலாம் என்பதால் நாடு கடத்தல் தாமதமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.