முக்கியச் செய்திகள் குற்றம்

பள்ளி மாணவியை கடத்தியவர் மீது போக்சோ வழக்கு

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற அன்பரசன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் வீட்டிலிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 31ம் தேதி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர்கள், நண்பர்களிடன்  மாணவி விசாரித்தனர். ஆனால், அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோயில் புங்கனூரை சேர்ந்த முனுசாமி மகன் அன்பரசன் என்பவன் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அன்பரசனை கைது செய்து அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிந்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று; மலேசியாவில் அவசர நிலை பிரகடனம்!

Saravana

கொரோனா தடுப்பூசி யார் போடலாம்? யார் போடக்கூடாது?

பிஎம் கேர் நிதி; வெள்ளை அறிக்கை வெளியிட திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்

Halley Karthik