அரிய வகை நோய் பாதிப்பு; சிறுமி மித்ராவுக்கு ரூ16 கோடி மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டது

முதுகு தண்டுவட நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 2வயது சிறுமிக்கு 16கோடி ரூபாய் மதிப்பிலான ஊசியை மருத்துவர்கள் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் பிரியதர்ஷினி தம்பதி. இவர்களது 2 வயது…

முதுகு தண்டுவட நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 2வயது சிறுமிக்கு 16கோடி ரூபாய் மதிப்பிலான ஊசியை மருத்துவர்கள் செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் பிரியதர்ஷினி தம்பதி. இவர்களது 2 வயது மகள் மித்ராவிற்கு அரிய வகை நோய்களில் ஒன்றான முதுகு தண்டுவட நார் சிதைவு நோய் தாக்கியது. இந்த நோயினை குணப்படுத்த ஸோல்ஜென்ஸ்மா (ZOLGENSMA)  எனும் மருந்தினை பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் வரியுடன் சேர்த்து 22 கோடி ரூபாய் தேவைப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு மாத காலமாக, சமூகவலைதளங்களிலும், பல்வேறு தரப்பினரிடம் நிதி சேகரிக்கப்பட்டு 16 கோடி ரூபாயை சேர்த்தனர். இதையடுத்து, இந்த மருந்திற்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதை ஏற்ற மத்திய அரசு தடுப்பூசிக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தது. இதனையடுத்து வெளிநாட்டிலிருந்து ஸோல்ஜென்ஸ்மா (ZOLGENSMA) என்கிற தடுப்பூசியை மருத்துவர்கள் இறக்குமதி செய்தனர். இதனையடுத்து பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டுள்ள சிறுமி மித்ராவிற்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தினர். தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமி மித்ராவை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும், சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.