மக்கள் மருந்தகத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

மக்கள் மருந்தகங்களில் 90% வரை மருந்துகள் விலை குறைவாக கிடைப்பதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார். பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டம் ஒவ்வொரு ஆண்டும்…

மக்கள் மருந்தகங்களில் 90% வரை மருந்துகள் விலை குறைவாக கிடைப்பதால்
பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒரு வாரம் விழிப்புணர்வு வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

பிரதமரின் மக்கள் மருந்தக வார விழாவையொட்டி, புதுச்சேரி, முத்தியால்பேட்டை
பகுதியில் உள்ள மக்கள் மருந்தகத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார். மேலும், பொதுமக்கள் முன்னிலையில், மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு மற்றும் வகைமையைப் பார்வையிட்டு விற்பனைத் திறன் குறித்து கடை பொறுப்பாளரிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிக்க: “2024-தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்”: அண்ணாமலை விமர்சனம்

மேலும், மக்கள் மருந்தகங்களில் 90% வரை மருந்துகள் விலை குறைவாக கிடைப்பதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.