பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாமோதர்தாஸ் மோடி மற்றும் ஹீரா பென் தம்பதிக்கு 5 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் 4வதாக பிறந்தவர் பிரகலாத் மோடி. பிரதமர், பிரகலாத்தை தவிர சோமா மோடி, பங்கஜ் மோடி, அம்ரித் மோடி, வசந்தி பென் ஹஸ்முக்லால் மோடி உள்ளிட்டோர் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவால் காலமானார். பிரதமர் மோடி தனது தாயின் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், தேர்தலின் போதும் தனது தாயை பார்த்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவதை பிரதமர் நரேந்திரமோடி வழக்கமாக கொண்டிருந்தார். அவரது மறைவு பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய இழப்பாகிவிட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக, சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.







