மாயவரத்தில் 68-ம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மாயவரம் ராதா கல்யாண டிரஸ்ட் சார்பில் 68-ம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் கடந்த 24-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக, சவீதா ஸ்ரீராம் நாம சங்கீர்த்தனம், உடையாளூர் கலைமாமணி டாக்டர் கல்யாண ராம பாகவதர், மாயாவரம் ஞானகுரு பாகவதர், மயிலாடுதுறை முத்துகிருஷ்ண பாகவதர் உள்ளிட்ட பல்வேறு பாகவதர்கள் பங்கேற்ற கீதகோவிந்நதம், அஷ்டபதி பஜனை, நாம சங்கீர்த்தனம், திவ்ய நாம பஜனை, சங்கீத உடன்யாசம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதனை தொடர்ந்து ராதா கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் மங்கலப் பொருட்களை சீர் வரிசையாக எடுத்துவந்து சமர்ப்பணம் செய்தனர். திவ்ய நாம பஜனை திருமாங்கல்ய தாரணம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் ராதா ருக்மணி சமேதராக திருமணக் கோலத்தில் எழுந்தருளி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஆடி, பாடி வழிபாடு செய்தனர்.








