முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வென்ற தொகுதிகள் எவை?

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல், கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. திமுக 129 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக 65 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி முதல்வராகப் பதவி ஏற்கிறார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 தொகுதி களும் தமாகாவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. சேலம் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட இரா. அருள், பென்னாகரம் தொகுதியில், அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தருமபுரி தொகுதியில் வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதியில் சிவகுமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற 18 தொகுதிகளில் பாமக தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ம.க. தற்போது அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

“காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது” – பா.சிதம்பரம்

Saravana Kumar

நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்

L.Renuga Devi

ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை – சீமான்

Gayathri Venkatesan