முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

மு.க ஸ்டாலினுக்குப் பன்னீர் செல்வம் வாழ்த்து!

தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 70 இடங்களைக் கைப்பற்றியது. வருகின்ற மே 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கிறார். வெற்றியைத் தன்வசமாக்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும் நேற்றைய தினத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ராகுல்காந்தி, லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த ஊழியர் இருவர் உயிரிழப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம் வேதனை

Jeba

டெல்லி காவல்துறைக்கு வைகோ கடும் கண்டனம்!

Jayapriya

பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன்: இளையராஜா

Niruban Chakkaaravarthi