முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

பாமகவின் சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாமகவின் 14-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராமதாஸ், பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, பாமகவின் திட்டமாக கருதாமல், வேளாண் பெருமக்களின் திட்டமாக தமிழ்நாடு அரசு கருத வேண்டும், எனக் கூறினார்.

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பாமகவின் வேளாண் நிதி நிலை அறிக்கையை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரி சபாநாயகராகிறார் பாஜக எம்.எல்.ஏ செல்வம்!

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

Jeba Arul Robinson

ஷாங்காய் பட விழாவில் நயன்தாராவின் கூழாங்கல்!

Ezhilarasan