5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆயுதப்படை (சென்னை) ஐஜிபி-யாக இருந்த…

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஆயுதப்படை (சென்னை) ஐஜிபி-யாக இருந்த ஜெ.லோகநாதன், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த எம்.டி.கணேஷ் மூர்த்தி, சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், காவலர் தேர்வு பள்ளி (தூத்துக்குடி) எஸ்.பி-யாகவும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்ட்டாக இருந்த டி.பி.சுரேஷ் குமார், திருநெல்வேலி சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவலர் தேர்வு பள்ளி (தூத்துக்குடி) எஸ்.பி-யாக இருந்த எஸ்.செந்தில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.