பழைய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்பிக்கை இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை நலசங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம் ஆகியவற்றை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்வில் அவர், முந்தைய காலத்தில் சரியாக படிக்காத பிள்ளைகளை ஆசிரியர்கள் தண்டனை அளித்து திருத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததை சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போது ஆசிரியர்களையே மாணவர்கள் அடிப்பது வேதனையான சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நிகழ்ச்சியில் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய கல்வி கொள்கையில் உள்ள தாய் மொழி கல்வி உள்ளிட்ட சில அம்சங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது எனக் கூறினார். ஆனால் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் தேவையற்றவை என்றும் தெரிவித்தார். இந்தியாவிற்கு தேசிய மொழி என எதுவுமில்லை எனவும் தமிழும் ஆங்கிலமும் தெரியும் போது எதற்கு இந்தி என்றும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.