ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்

நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன்மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் சமன் செய்தார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல்…

நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன்மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் சமன் செய்தார்.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் களம் கண்டன. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ அணி களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளுக்கு 103 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிளக்காமல் இருந்தார்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 103 ரன்கள் விளாசியதன் மூலம் கே.எல்.ராகுல் ஐபிஎல் போட்டியில் அதிக சதமடித்த இந்தியர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். இதுவரை ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் 6 சதம் அடித்துள்ளார். இவரைத்தொடர்ந்து விராட் கோலி 5 சதமும், சுரேஷ் ரெய்னா 4 சதமும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.