தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களிடம் வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, அவர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொண்டர்களின் உழைப்பால்தான் எதிரணியில் உள்ள தங்க தமிழ்ச்செல்வனுக்கு அரசியல் விலாசம் கிடைத்ததாகக் கூறினார்.
திமுகவின் சார்பில் போடி தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வனை, டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றும் வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார். சிறுபான்மையினருக்கு அரணாக இருந்து, அதிமுக அரசு பாதுகாத்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
தேனி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பல எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.







