முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடியின் தாயார் மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். அவருக்கு வயது 100. தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசரஅவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம்.

 

தாயின் இழப்பை யாராலும் தாங்க முடியாது. உங்கள் இழப்புக்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் இருந்த நினைவுகளில் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நமது பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவிற்கு பாஜக தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சம்பாதிப்பதிலும் சாதனை.. சரிவிலும் சாதனை..- எலான் மஸ்க்கின் கின்னஸ் சாதனை

Web Editor

ஹரியானாவில் பதுங்கியுள்ள அம்ரித் பால் சிங் – வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Web Editor

நடிகர் விஜயின் சொகுசு கார் விவகாரம்; நடவடிக்கையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு

Halley Karthik