முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் மோடியின் தாயார் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 100. தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசரஅவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாவின் நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கை இந்திய இலட்சியங்களின் அடையாளம். மோடி தனது வாழ்க்கையில் தனது தாயாரின் மதிப்புகளை உள்வாங்கினார். அவரின் புனித ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்! என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமரின் தாயார் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையின் முதல் நண்பன் மற்றும் ஆசிரியை அம்மா. தாயை இழந்து வாடுவது உலகின் மிகப்பெரிய வலி என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உலகம் போற்றும் உன்னத மாமனிதனை ஈன்றெடுத்த தாய் ஹீராபென் மோடியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மறைந்த அன்பு தெய்வத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். இந்த கடினமான சூழலில் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்மோடி கடவுளின் தாமரை பாதங்களை அடைந்தார். உங்களின் இழப்பையும் துயரத்தையும் எங்கள் சொந்த குடும்பமாக பகிர்ந்து கொள்ள தேசம் நிற்கிறது. பிரிந்த ஆன்மாவுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்வோம். இழப்பைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கவும், தேசத்திற்கு அயராத சேவையைத் தொடரவும் இறைவனை வேண்டுகிறோம் என கூறியுள்ளார்.

இதேபோல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

NAMBIRAJAN

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Web Editor

மின்வெட்டு மாயத்தோற்றம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

G SaravanaKumar