வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

கொரோனா நிலவரம் குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும், நிலையில் வடகிழக்கு மாநிலங்களில்…

கொரோனா நிலவரம் குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும், நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து இன்று காலை 11 மணியளவில் காணோலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 39,649 நபர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 724 பேர் உயிரிழந்துள்ளனர்.  சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,74,376 ஆக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.