நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இன்று மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடப்பாண்டில் 198 நகரங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கப்படும் என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்படும் எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.







