இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட பெங்களூரு சென்றார் பிரதமர் மோடி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

சந்திரயான்-3 திட்டம் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட கிரீஸில் இருந்து பெங்களூரு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை…

சந்திரயான்-3 திட்டம் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட கிரீஸில் இருந்து பெங்களூரு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய சாதனை புரிந்தது. மேலும் லேண்டரில் இருந்து ரோவர் பிரிந்து நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய போது தென்னாப்பிரிக்காவில் இருந்த பிரதமர் மோடி அங்கிருந்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி இன்று காலை பெங்களுரூ திரும்பினார்.

ஹச்ஏஎல் விமான நிலையத்தில் அவருக்கு கர்நாடகா மாநில பாஜக தலைவர் நளின்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபபோது பேசிய பிரதமர் இந்த சாதனை நிகழ்த்தப்பட் ட போது நான் இங்கு இல்லை. எனவே நாடு திரும்பியவுடன் முதலில் இஸ்ரோவுக்கு சென்று விஞ்ஞானிகளை சந்திக்க முடிவு செய்தேன் என்றும், என்னாலே என்னை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் சிறிதுநேரம் ஓய்வு எடுத்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளை சந்தித்துப் பாராட்டுவதற்காக பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.