ரோவர் இயக்குவதற்கு தேவையான மின்சார சக்தியைப் பெற சூரியசக்தி மின்தகடு சூரியனை நோக்கி திரும்பியது.
நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் திட்டமிட்டபடி கடநத் 23) ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதனைத்தொடர்ந்து ரோவரில் உள்ள இரு அறிவியல் ஆய்வு கருவிகளான LIBS மற்றும் APXS ஆகிய கருவிகள் செயல்படத் தொடங்கியதாகவும், அனைத்து அறிவியல் ஆய்வுக் கருவிகளும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்தது.
இதுதொடர்பான வீடியோவும் வெளியானது. இந்நிலையில், ரோவர் இயக்குவதற்கு தேவையான மின்சார சக்தியைப் பெற சூரியசக்தி மின்தகடு சூரியனை நோக்கி திரும்பியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.







