மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை – போடி ரயில் தடத்தில் ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா ரயில் நேற்று இரவு நிறுத்தப்பட்டிருந்தது. இன்று (ஆக.26) காலை 5:30 மணியளவில் இந்த சுற்றுலா ரயிலின் சமையல் கோஸில் இருந்த சிலிண்டர் வெடித்து சமையல் கோஸ் தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பெட்டியில் பயணம் செய்த 90 பேரில் 80 பேருக்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளனர். மேலும், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் எரிந்த நிலையில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







