முதன் முறையாக இந்திய பிரதமர் தலைமையில் ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய நேரப்படி மாலை 5.30க்கு தொடங்கும் இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நைஜர் அதிபர் முகமது பஸூம், கென்யா ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா, வியட்நாம் பிரதமர் பம் மின் சின், மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு தலைவர் (டிஆர்சி) பெலிக்ஸ் சிசேகேடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கூட்டத்தில், கடல்சார் பாதுகாப்பு மேம்பாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அலுவலக தலைவர் மரியா லூயிசா ரிபேரோ வயோட்டி, போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா அலுவலகத்தின் நிர்வாக இயக்குனர்(UNODC) கடா பாத்தி வாலி மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசுத் தலைவர் ஃபெலிக்ஸ் சிசெகெடி ஆகியோர் இந்த கூட்தை விரிவாக விளக்கி உரையாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.