ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்

ஆட்சி செய்ய இயலாமல், நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்வதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம்…

ஆட்சி செய்ய இயலாமல், நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்வதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார்.

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி கூட உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், நாகை மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ எஸ் மணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது மக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு செயல்படாமல் தடுத்து மூடுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையை தெரிந்து கொண்ட திமுகவினர், தற்போது ஆட்சி நடத்தமுடியாமல் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறி வருகின்றனர் என விமர்சனம் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.