கூட்டணி குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து!

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நிறைவேற்றினால் கூட்டணி தொகுதிப் பங்கீடு பற்றி அறிவிக்கப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். சேலத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்…

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நிறைவேற்றினால் கூட்டணி தொகுதிப் பங்கீடு பற்றி அறிவிக்கப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

சேலத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அக்கட்சியின் ஜி.கே. மணி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி 5 கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். வரும் 29 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் ஜி.கே.மணி தெரிவித்தார்.

விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட வட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாகக் கூறிய அவர், எனவேதான் 40 ஆண்டுகாலமாக இந்த போராட்டம் நடைபெறுவதாகக் கூறினார். 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஏற்கும் பட்சத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாமக உள்ளது என தெரிவித்த அவர், தங்களின் வலிமைக்கு ஏற்ப தொகுதியை கேட்டுப் பெறுவோம் என்றும் உறுதிபடத்தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply