அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரை வைத்து ஆள துடிக்கிறார் பிரதமர் மோடி – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

ஆளுநர்களை கொண்டு அனைத்து மாநிலங்களையும் ஆளு பிரதமர் மோடி முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.  டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கெஜ்ரிவால், இந்த விவகாரத்தில்…

ஆளுநர்களை கொண்டு அனைத்து மாநிலங்களையும் ஆளு பிரதமர் மோடி முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். 

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கெஜ்ரிவால், இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பாட்னாவில் 23ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் போது, நாடாளுமன்றத்தில் அவசர சட்டத்தை எவ்வாறு தோற்கடிப்பது என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த அவசர சட்டம் என்பது ஒரு பரிசோதனை என்றும் இதில் வெற்றி கிடைத்து விட்டால், இதே போல அவசர சட்டங்களை கொண்டு வந்து, பா.ஜ.க. அல்லாத மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக் கொள்ளும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டால் டெல்லியில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ஜனநாயகம் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.