உலக அளவில் அமைதியின்மைக்கு அடிப்படை காரணம் தீவிரவாதமே என ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் உச்சி மாநாட்டின் 20ஆம் ஆண்டு விழாவில், காணொலியில் பேசிய பிரதமர் மோடி, ஷாங்காய் ஒருங்கிணைப்பு அமைப்பில் இணைந்துள்ள ஈரானை வரவேற்பதாகக் கூறினார். மேலும், ஷாங்காய் ஒருங்கிணைப்பு அமைப்புடன் இணைந்துள்ள உறுப்பு நாடுகளுக்கு தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.
அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கையின்மை ஆகியவற்றுக்கு அடிப்படை காரணமான தீவிர வாதத்தை உறுப்பு நாடுகள் ஒழிக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர்களை இணைக்கும் புதுமையான மனநிலையை உரு வாக்க, தொழில் முனைவோர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி குறிப் பிட்டுள்ளார்.







