டாஸ்மாக் கடைகள் மூடல்: மண்டலவாரியாக பட்டியல் வெளியீடு…!

தமிழ் நாடு அரசால் மண்டல வாரியாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் மண்டல வாரியாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியலை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன் படி மண்டலவாரியாக மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை :

சென்னை மண்டலம் – 82 கடைகள்

கோயம்புத்தூர் மண்டலம் – 179 கடைகள்

சேலம் மண்டலம் – 82 கடைகள்

திருச்சி மண்டலம் – 84

மதுரை மண்டலம் 290

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.