முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

பாதுகாப்பு அச்சுறுத்தல்: நியூசிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் திடீர் ரத்து

பாதுகாப்பு பிரச்னை காரணமாக, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந் தது. 18 வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்து அணி அந்த நாட்டில் விளையாட இருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல் பிண்டி மைதானத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து அணி மைதானத்துக்குள் செல்ல மறுத்துவிட்டது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் நியூசிலாந்து அணி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான தொடர், பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து
சுற்றுப்பயணத்தையும் முடித்துக் கொண்டு நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது, பயங்கர வாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். அந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து பல வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் அங்கு சென்று கிரிக் கெட் விளையாட மறுத்து வந்தது. இந்நிலையில் இப்போது பாதுகாப்பு பிரச்னையை காரணம் காட்டி நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.

Advertisement:
SHARE

Related posts

மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது

Jeba Arul Robinson

பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!

Halley karthi

கைதிகளுக்கு பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Ezhilarasan