முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நிதியமைச்சர் விளக்கம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரையில் சரியான திட்டமிடல் இல்லாமல் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, தாமதமாக அழைப்பு வந்ததாலும், முதலில் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் பல முக்கிய நிகழ்வு இல்லாத காரணத்தாலும், தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் விளக்கம் அளித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக காணொலியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், 20 மாதங்களுக்கு பிறகு மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

1 நிமிடத்தில் 39 விமான நிறுவனங்களை அடையாளம் கண்டுபிடித்து உலக சாதனை!

Jayapriya

நடிகர் சூர்யா கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்: பாஜக புகார்

Gayathri Venkatesan

“தி ஃபேமிலி மேன்” மூன்றாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதியா??

Vandhana