மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் ஆலோசனை!

அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல்கட்ட ஒத்திகை கடந்த 2-ந்தேதி 125 மாவட்டங்களில் நடைபெற்றது. இதன்…

அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல்கட்ட ஒத்திகை கடந்த 2-ந்தேதி 125 மாவட்டங்களில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட ஒத்திகை நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள, 2ஆயிரத்து 300 மையங்களில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் திங்கள்கிழமை ஜனவரி 11ஆம் தேதி)) மாலை 4 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும் மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply