திரையுலக பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த ஸ்வப்னில் ஷிண்டே, சாய்ஷா ஷிண்டே என தனது பெயரை மாற்றி திருநங்கையாக மாறியுள்ளார்.
பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா, டாப்ஸி, கரீனா கபூர் ஆகியோருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர் ஸ்வப்னில் ஷிண்டே. இந்நிலையில் அவர் 2021ம் ஆண்டு முதல் சாய்ஷா ஷிண்டேவாக மாறியிருப்பதாக அறிவித்துள்ளார். இனி தான் Gay இல்லை என்றும், திருநங்கை என்று பெருமையுடன் கூறவிருப்பதாகவும் பேசியுள்ளார். தனது புகைப்படங்கள் சிலவற்றையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறுவயது முதலே தான் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார். மற்ற ஆண்களிடம் இருந்து சற்று வேறுபட்டு இருந்ததாகவும், இதனால் மற்றவர்கள் விமர்சனம் செய்யும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார். ஆண்கள் மீது ஈர்ப்பு இருந்ததால், தன்னை Gay என நினைத்திருந்ததாகவும், ஆனால் சில நாட்களுக்கு பிறகுதான் அதற்கான உண்மையான காரணம் தனக்கு தெரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு திருநங்கை என்பதை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்ததாக கூறியுள்ளார். தற்போது அதனை அனைவரது மத்தியிலும் ஒப்புக் கொள்வது பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.