அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டை முடிவு செய்ய அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, சட்டமன்ற…

கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டை முடிவு செய்ய அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வெற்றி வியூகம் வகுக்கவும், கூட்டணி கட்சிகளையும், தொகுதி பங்கீட்டை முடிவு செய்யவும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதை, ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாகவும், கட்சி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, அதிகாரமிக்க 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு அதிமுக பொதுக்குழு ஒப்புதல் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிமுக பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக அரசுக்கும், முதலமைச்சர் பழனிசாமியின் நிர்வாக திறமைக்கும் மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து வருவதை அதிமுக பொதுக்குழு கண்டித்துள்ளது. மேலும், அண்ணா, எம்ஜிஆர் கனவு கண்டவாறு உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply