செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில்…

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி
தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்
பேருந்து, முன்னால் சென்ற இரும்பு ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 3 ஆண்கள், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, காயமடைந்தவர்கள் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது மேலும், நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதையடுத்து போலீஸார் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், செங்கல்பட்டு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வருந்துகிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/PMOIndia/status/1545306803243819008?t=yWoGcqF8A7QVVyDJ56gORg&s=08

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.