பி.எம்.கேர் நிதியில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு

பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக் குறை ஏற்பட்டது.…

பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக் குறை ஏற்பட்டது. இதையடுத்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவப் பட்டுள்ள 35 பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இத்துடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன.

நாடு முழுவதும் தற்போது வரை பிஎம் கோ்ஸ் மூலம் மொத்தம் 1224 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு நிதி வழங்கப் பட்டுள்ளது. இவற்றில் 1100-க்கும் அதிகமான நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. இவற்றில் நாளொன்றுக்கு 1750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.