உலகப் புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழாவில் பக்தர்கள் இன்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு லட்சக் கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் பக்தர்கள் இன்றி நேற்று தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அலங்கரிக்கப் பட்ட யானை முன்செல்ல, கொடிப்பட்டம் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தது. தொடர்ந்து நேற்று காலை 9.42 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற் றப்பட்டது.
கொரோனா காரணமாக, 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் எளிமை யாக நடந்தது. இதனால் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த தசரா திருவிழா10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேடம் அணிந்து பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இன்று மற்றும் 11 முதல் 14ஆம் தேதி வரை மட்டுமே கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.