திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பிரம்மோற்சவ விழா தொடங்குவதை யொட்டி கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற் றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி திருமலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வீதிகளில் தோரணங்கள் அமைக்கப் பட்டுள்ளன. வண்ண மலர்களால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தங்கப் பலிபீடம், கொடிமரம் ஆகியவை பிரத்யேக மலா்களால் அலங்காரம் செய்யப் பட்டுள்ளன.
பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மாலை சேனாதிபதி உற்சவமும், அங்குரார்ப் பணமும் நடந்தது. பிரம்மோற்சவ விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி பங்கேற்று மூலவருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார். திருப்பதியில் பல்வேறு நலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் அலிபிரியில் இருந்து திருமலை வரை சீரமைக்கப்பட்ட நடைபாதையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.








