முக்கியச் செய்திகள் கொரோனா

பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்

கொரோனா தொற்றுப் பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்க மாநில அரசுகள் பரிசோதனை-கண்டறிதல்-தடுப்பூசி என்ற உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

“கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து பல மாநிலங்கள் பொது ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தி உள்ளன. கள அளவில் நோய் தொற்றின் தாக்கம் எப்படி இருக்கிறது என்ற ஆய்வின் அடிப்படையிலேயே ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கும்போது அதன் நடைமுறைகள் மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கும்போது ஐந்து அடுக்கு உத்தியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை மற்றும் தடுப்பூசிபோடுதல் ஆகிய உத்திகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்று தடுப்பில் குறைபாடு ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள சில மாநிலங்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக நடமாடுவது அதிகரித்திருக்கிறது. கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. கொரோனா தொற்று அதிகரிப்பது குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

சிறியபகுதிகளில் தொற்று அதிகரிப்பதை கண்காணிக்க மைக்ரோ அளவிலான கண்டறிதல் நடைமுறையை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று சங்கிலியை உடைப்பதற்கு தடுப்பூசி போடுவது முக்கியமான நடவடிக்கையாகும். எனவே அனைத்து மாநிலங்களும் அதிகபட்ச அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த வேண்டும்.”

இவ்வாறு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

வட துருவத்தின் வான்வழியாக ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண் விமானிகள்; இந்திய விமான வராலாற்றில் புதிய சாதனை!

Saravana

திமுகவின் திராவிட கருத்தியலுக்காக வாக்களித்தார்கள் என்றால், பிரஷாந்த் கிஷோர் எதற்கு? சீமான் கேள்வி

Ezhilarasan

எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது!

Halley karthi