முக்கியச் செய்திகள் இந்தியா

ராகுல் காந்தியின் 51-வது பிறந்தநாள் இன்று!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை
முன்னிட்டு இன்று முக்கிய அரசியல் தலைவர்கள் பலர், தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு 51 ஆவது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில்,
எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; சமத்துவ இந்தியாவை உருவாக்குவதற்கான அவரது தன்னலமற்ற அயராத உழைப்பை பாராட்டுகிறேன், காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள் குறித்து அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியாக உள்ளது”. எனத் தெரிவித்தார்.

மேலும், கர்நாடாக முதலமைச்சர் சித்தராமையா, நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் வாழ்த்தியுள்ளனர். நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பதில், கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபடக் கோரி கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கத்தினா மட்டும் போதுங்க.. ரூ.30 ஆயிரம் சம்பளம்!

Vandhana

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்தால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; முதல்வர் அறிவிப்பு!

Saravana Kumar

டி 20 உலகக்கோப்பையில் புதிய ஜெர்ஸியுடன் களமிறங்கும் இந்திய அணி

Saravana Kumar